TNPSC Thervupettagam

மகாராஜ் கஞ்ச்

October 26 , 2023 433 days 274 0
  • ஸ்ரீநகர் பொலிவுரு நகர லிமிடெட் மற்றும் கலை மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்திற்கான இந்தியத் தேசிய அறக்கட்டளையின் (INTACH) காஷ்மீர் அத்தியாயம் என்ற அமைப்பு காஷ்மீரி கட்டிடக் கலையின் வட்டாரக் கூறுகளைப் பாதுகாப்பதற்காக கை கோர்த்துள்ளன.
  • மஹாராஜ் கஞ்ச் சந்தைப் பகுதியானது வட்டார அம்சம் மற்றும் காலனித்துவ கட்டிடக் கலையின் செழுமையான கலவையைக் கொண்டுள்ளது.
  • இந்த முன்னெடுப்பானது 1846 முதல் 1947 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்த டோக்ரா இந்து மன்னர்களின் ஆட்சியின் போது காஷ்மீரில் அறிமுகப்படுத்தப்பட்ட அரிய கட்டிடக் கலை கூறுகள் குறித்த தகவல்களை வெளிப்படுத்துகிறது.
  • மகாராஜ் கஞ்ச் சந்தையானது ஸ்ரீநகரின் பழைய நகரமான ஷெஹர்-இ-காஸின் மையத்தில் அமைந்துள்ளது.
  • காஷ்மீரில் ஆரம்பத்தில் வணிகம் மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக என்று மகாராஜா ரன்பீர் சிங் அவர்களால் நிறுவப்பட்டது.
  • 1947 ஆம் ஆண்டிற்கு முந்தைய சகாப்தத்தில், இது பிராந்திய எல்லைகளைத் தாண்டி, அமிர்தசரஸ், லாகூர், கராச்சி, ராவல்பிண்டி மற்றும் மத்திய ஆசியாவின் சில பகுதிகளிலிருந்தும் வணிகர்களை ஈர்த்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்