மகாராஷ்டிரா மாநில அரசானது சந்திரப்பூரின் கோண்ட்பிப்ரி வட்டப் பிரிவில் (Gondpipri tehsil) கன்ஹர்கானில் உள்ள பகுதியை ஒரு புதிய வனவிலங்குச் சரணாலயமாக அங்கீகரித்துள்ளது.
இது அந்த மாநிலத்தின் 50வது வனவிலங்குச் சரணாலயமாகும்.
தெலுங்கானாவில் உள்ள காவல் புலிகள் காப்பகத்தில் (Kawal tiger reserve) உள்ள புலிகள் மற்றும் இந்திராவதி புலிகள் காப்பகத்தில் இருக்கும் புலிகள் ஆகியன கடந்து செல்லும் ஒரு பாதையாக கன்ஹர்கான் அமைந்துள்ளது.
கொல்ஹாப்பூர், நாக்பூர், அமராவதி, சதாரா மற்றும் சிந்துதுர்க் மாவட்டங்களில் 11 காப்புப் பகுதிகளைப் பாதுகாப்புக் காப்பகங்களாக அறிவிக்கவும் முடிவு செய்யப் பட்டுள்ளது.
இதன்மூலம் மகாராஷ்டிராவானது 19 பாதுகாப்புக் காப்பகங்களைக் கொண்டிருக்கும்.
தற்போது, நாடு முழுவதும் 92 பாதுகாப்புக் காப்பகங்கள் உள்ளன.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கூற்றுப்படி, பாதுகாப்புக் காப்பகங்கள் என்பது பாதுகாக்கப்பட்ட பகுதிகளாகும், அவை நிறுவப்பட்ட தேசிய பூங்காக்கள், வனவிலங்குச் சரணாலயங்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட காடுகளுக்கு இடையில் இடையக மண்டலங்கள் (buffer zones) அல்லது இணைப்பிகள் (connectors) மற்றும் விலங்குகள் இடம்பெயர்ந்துச் செல்லும் பாதைகளாக செயல்படுகின்றன.