TNPSC Thervupettagam

மகாராஷ்டிரா அரசின் சக்தி மசோதா

December 29 , 2021 937 days 502 0
  • மகாராஷ்டிரா மாநில அரசாங்கத்தின் 2020 ஆம் ஆண்டு சக்தி குற்றவியல் சட்டங்கள் (மகாராஷ்டிரா திருத்தம்) மசோதா, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாலியல் வன்முறை வழக்குகளுக்கு மரணத் தண்டனையை விதிக்கப் பரிந்துரைத்துள்ளது.
  • இதில் ஒரு புகாரினைப் பதிவு செய்த நாளிலிருந்து  30 நாட்களுக்குள் அந்தப் புகாரின் மீதான ஆய்வினை முடிப்பதற்கு காலவரம்பு விதிக்கப்பட்டுள்ளது.
  • இதற்கு முந்தைய மசோதாவின் விதிமுறைகள்படி பெண்கள் மீது வன்முறை மேற் கொண்ட தனிநபர்கள், ஒரு  முன்னெச்சரிக்கை தடுப்புப் பிணையினைப் பெறுவதற்கு இருந்த வாய்ப்பினை  இது ரத்து செய்தது.
  • இது குறித்து மூத்த வழக்கறிஞர்களிடமிருந்து ஆலோசனை பெற்ற பிறகு  இந்தப் புதிய பரிந்துரைகள் இதனை ரத்து செய்தன.
  • பொய்யான பாலியல் புகார்களை அளிப்பவர்களுக்கு குறைந்தது ஒரு வருட சிறைத் தண்டனை முதல் அதிகபட்சமாக மூன்று வருட சிறைத் தண்டனை வரையும், 1 லட்சம் அபராதமும் விதிப்பதற்கான விதிமுறைகளை இந்த மசோதா  உருவாக்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்