TNPSC Thervupettagam

மகாராஷ்டிரா மற்றும் குஜராத் தினம் – மே 01

May 3 , 2021 1215 days 448 0
  • மே 01 ஆம் தேதியானது மகாராஷ்டிர மாநில தினமாகவும் குஜராத் மாநில தினமாகவும் கொண்டாடப் படுகிறது.
  • 1960 ஆம் ஆண்டில்  பலமொழிகளை கொண்டிருந்த பம்பாய் மாநிலத்தை குஜராத் மற்றும் மகாராஷ்டிரா என இரு மாநிலங்களாகப் பிரிப்பதற்கான பம்பாய் மறுசீரமைப்புச் சட்டத்தை இந்தியப் பாராளுமன்றம் நிறைவேற்றியது.
  • இச்சட்டம் 1960 ஆம் ஆண்டு மே 01 முதல் நடைமுறைக்கு வந்தது.
  • இதற்கு முன்பு பம்பாய் மாநிலமானது மராத்தி, குஜராத்தி, கொங்கனி மற்றும் கட்ச் ஆகிய வெவ்வேறு மொழிகளைப் பேசும் மக்களைக் கொண்ட ஒரு மாநிலமாக இருந்தது.
  • 1950களின் இடைப்பட்டக் காலங்களில் சம்யுக்தா மகாராஷ்டிரா அந்தோலன் எனும் ஒரு இயக்கமானது மராத்தி பேசும் மக்களுக்கென ஒரு தனி மாநிலத்தினைக் கோரத் தொடங்கியது.
  • மகா குஜராத் இயக்கமானது குஜராத்தி பேசும் மக்களுக்கான ஒரு தனி மாநிலத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
  • இந்த இயக்கங்களின் கோரிக்கைகளினால் பம்பாய் மறுசீரமைப்புச் சட்டம் இயற்றப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்