மே முதல் நாளானது மகாராஷ்டிரா மற்றும் குஜராத் தினமாகக் கொண்டாடப்படுகின்றது.
1960 ஆம் ஆண்டு பாம்பாய் மறுசீரமைப்புச் சட்டமானது இந்தியப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுப் பன்மொழி மாநிலமான பம்பாய் ஆனது குஜராத் மற்றும் மகாராஷ்டிராவாக பிரிக்கப்பட்டது.
இந்தச் சட்டமானது மே 01, 1960ல் நடைமுறைக்கு வந்தது.
பம்பாய் மாநிலமானது முன்னதாக மராத்தி, குஜராத்தி, கொங்கணி, மற்றும் கட்ச்சி ஆகிய மொழி பேசும் மக்களைக் கொண்டிருந்தது.
1950களின் இடைப்பட்ட பகுதியில் சம்யுக்தா மகாராஷ்டிரா அந்தோலன் என்றழைக்கப்பட்ட இயக்கமானது மராத்தி பேசும் தனி மாநிலத்தைக் கோரியது.
அதே சமயம் மகாகுஜராத்தி இயக்கமானது குஜராத்தி பேசும் மக்களுக்கு தனி மாநிலத்தினை உருவாக்கும் நோக்கத்தினைக் கொண்டிருந்தது.
இந்த இயக்கங்களானது பம்பாய் மறுசீரமைப்புச் சட்ட உருவாக்கத்தில் முடிவடைந்தது.