TNPSC Thervupettagam

மகாராஷ்டிரா வங்கி வளர்ச்சி விகிதம்

May 23 , 2024 56 days 147 0
  • பொதுத்துறை கடன் வழங்கீட்டு நிறுவனங்களிடையே மொத்தப் பண மாற்றம் மற்றும் வைப்புத் திரட்டலின் அடிப்படையில், அரசுக்குச் சொந்தமான மகாராஷ்டிர வங்கி கடந்த நிதியாண்டில் மிக உயர்ந்த வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்தது.
  • இது 2024 ஆம் நிதியாண்டில் மொத்தப் பண மாற்றத்தில் (உள்நாட்டில்) 15.94 சதவீத உயர்வை பதிவு செய்துள்ளது.
  • அதைத் தொடர்ந்து 13.12 சதவீத வளர்ச்சியுடன் பாரத் ஸ்டேட் வங்கி (SBI) இடம் பெற்று உள்ளது.
  • பாரத் ஸ்டேட் வங்கியின் மொத்தப் பண மாற்றங்கள் (வைப்பு மற்றும் முன்பணம்) 16.7 மடங்கு உயர்ந்து சுமார் 79,52,784 கோடி ரூபாயாக இருந்ததோடு இது மகாராஷ்டிரா வங்கியின் (BoM) முழு அளவின் அடிப்படையில் 4,74,411 கோடி ரூபாயாக இருந்தது.
  • 2024 ஆம் நிதியாண்டில் 15.66 சதவீத வளர்ச்சியுடன், வைப்புத் திரட்டலின் வளர்ச்சியின் அடிப்படையில் BoM தொடர்ந்து முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டது.
  • அதைத் தொடர்ந்து பாரத் ஸ்டேட் வங்கி (11.07 சதவீதம்), பேங்க் ஆஃப் இந்தியா (11.05 சதவீதம்) மற்றும் கனரா வங்கி (10.98 சதவீதம்) ஆகியவை இடம் பெற்றுள்ளன.
  • 12 பொதுத் துறை வங்கிகளில், இந்த நான்கு கடன் வழங்கும் நிறுவனங்கள் மட்டுமே 2023-24 ஆம் நிதியாண்டில் வைப்புத் தொகையில் இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்ய இயலும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்