மகாவீர் ஜெயந்தி என்பது 24-வது மற்றும் கடைசிச் சமண தீர்த்தங்கரரான மகாவீரரின் பிறந்த தினத்தின் நினைவாகும்.
கிரிகோரியன் நாட்காட்டியின்படி, இந்நாளானது மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் நிகழ்கின்றது. இந்த ஆண்டு இத்தினமானது சமணர்களால் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 அன்று கொண்டாடப்பட்டது.
இது சமணர்களின் மிக முக்கியமான மதம் சார்ந்த திருவிழாக்களில் ஒன்றாகும்.
மகாவீரர் ஆன்மீக விடுதலைக்கு அகிம்சை (வன்முறையில் ஈடுபடாமை), சத்யம் (உண்மை), அஸ்தேயம் (திருடாமை), பிரம்மச்சரியம் (தூய்மை) மற்றும் அபரிகிரஹம் ஆகிய ஐந்தும் அவசியம் என்று போதித்தார்.
இவரது போதனைகள் இந்திரபூதி கௌதமா (தலைமைச் சீடர்) என்பவரால் தொகுக்கப்பட்டது.