மகிளா கயிறுத் திட்டத்தை கயிறு வாரியம் செயல்படுத்தி வருகிறது. பெண்களுக்கு கயிறு தயாரிக்கும் இயந்திரங்கள் வழங்குவதன் மூலமாக அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவது இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
இது முற்றிலும் பெண்களுக்காகவே செயல்படுத்தப்படும் திட்டமாகும் . கிராமப்புற பெண்களுக்கு சுய வேலைவாய்ப்பு வழங்குவதற்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இயந்திரம் மூலம் இயங்கும் கயிறு இராட்டைகள் மற்றும் பிற உபகரணங்கள் பெண்களுக்கு 75% மானியத்துடன் வழங்கப்படவுள்ளது . இரண்டு மாதங்கள் இயந்திரங்களை இயக்குவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு, 7500 ருபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது.