TNPSC Thervupettagam

மகிழ்ச்சியான நகரங்கள் மாநாடு

April 17 , 2018 2286 days 728 0
  • அமராவதியில் உள்ள மங்களகிரி நகரத்தில் 3 நாட்கள் நடைபெறும்   2018 ஆம் ஆண்டிற்கான மகிழ்ச்சியான நகரங்கள் மாநாட்டினை (Happy Cities Summit 2018)  ஆந்திரப்பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்துள்ளார்.
  • ஆந்திரப்பிரதேச மாநில அரசானது இம்மாநாட்டினை  நடத்துகின்றது. இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு (Confederation of Indian Industries -CII), மற்றும் சிங்கப்பூரின் வாழத்தகு நகரங்களுக்கான மையம்  (Centre for Liveable Cities)  ஆகியவை இம்மாநாட்டின் பங்களிப்பாளர் அமைப்புகளாகும்.
  • மாநிலத்தில் மகிழ்ச்சிக் குறியீட்டின் (Happiness Index) அளவினை அதிகரிப்பதன் மீதான  அரசினுடைய  முயற்சியின் வரிசையில் ஒத்திசைந்து, ஆந்திரப் பிரதேச மாநிலத்தில்   முதன் முறையாக  மகிழ்ச்சியான நகரங்கள் மாநாடு நடத்தப்பட்டுள்ளது.
  • குடிமக்களை மையப்படுத்திய ஆளுகை (citizen-centric governance), வாழத்தகு சமுதாயங்கள் (liveable communities), தூய்மையான மற்றும் சுகாதாரமான சுற்றுச்சூழல் (clean and healthy environment) மற்றும் துடிப்பான பொருளாதாரம் (vibrant economies)  ஆகியவை இம்மாநாட்டின் நான்கு மைய கருப்பொருட்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்