TNPSC Thervupettagam

மக்களவைத் தேர்தலில் உலக சாதனை

June 7 , 2024 42 days 209 0
  • இந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 31.2 கோடி பெண்கள் உட்பட 64.2 கோடி வாக்காளர்களுடன் இந்தியா உலக சாதனைப் படைத்துள்ளது.
  • அமெரிக்கா, ஐக்கியப் பேரரசு, பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், கனடா என அனைத்து G7 நாடுகளின் வாக்காளர்களின் எண்ணிக்கையினை விட இது 1.5 மடங்கு அதிகமாகும்.
  • இது ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 27 நாடுகளில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையினை விட 2.5 மடங்கு அதிகமாகும்.
  • இந்த உலகின் மிகப்பெரிய தேர்தல் நடவடிக்கையில் 68,000 கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் 1.5 கோடி வாக்குச் சாவடி மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
  • 2019 ஆம் ஆண்டில் 3,500 கோடி ரூபாயாக இருந்த வகையில் 2024 ஆம் ஆண்டு தேர்தலின் போது ரொக்கப் பணம், இலவசங்கள், போதைப்பொருள், மதுபானம் உட்பட 10,000 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்