இந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 31.2 கோடி பெண்கள் உட்பட 64.2 கோடி வாக்காளர்களுடன் இந்தியா உலக சாதனைப் படைத்துள்ளது.
அமெரிக்கா, ஐக்கியப் பேரரசு, பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், கனடா என அனைத்து G7 நாடுகளின் வாக்காளர்களின் எண்ணிக்கையினை விட இது 1.5 மடங்கு அதிகமாகும்.
இது ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 27 நாடுகளில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையினை விட 2.5 மடங்கு அதிகமாகும்.
இந்த உலகின் மிகப்பெரிய தேர்தல் நடவடிக்கையில் 68,000 கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் 1.5 கோடி வாக்குச் சாவடி மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
2019 ஆம் ஆண்டில் 3,500 கோடி ரூபாயாக இருந்த வகையில் 2024 ஆம் ஆண்டு தேர்தலின் போது ரொக்கப் பணம், இலவசங்கள், போதைப்பொருள், மதுபானம் உட்பட 10,000 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.