TNPSC Thervupettagam

மக்களவைத் தேர்தல் மற்றும் குற்றவியல் வழக்குகள்

March 22 , 2024 247 days 327 0
  • மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தமிழகத்தில் 2024 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி முதல் தொடங்கியது.
  • அரசியல் கட்சிகள் ஆனது, குற்றவியல் வழக்குகள் உள்ள வேட்பாளர்கள் குறித்த தகவல்களைப் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் வழங்குமாறு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ வலியுறுத்தியுள்ளார்.
  • உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளின்படி, குற்றவியல் வழக்குகள் உள்ள (முன்னதாக நிலுவையில் உள்ள வழக்குகளோ அல்லது முன்னதாக தண்டனை பெற்ற வழக்குகளோ) வேட்பாளர்களைப் பரிந்துரைக்கும் அரசியல் கட்சிகள் செய்தித் தாள்கள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் இது குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும்.
  • வேட்புமனுவைத் திரும்பப் பெறுவதற்கான கடைசித் தேதிக்கு அடுத்த நாளிலிருந்து மூன்று வெவ்வேறு தேதிகளிலும், வாக்கெடுப்பு முடிவதற்கு சுமார் 48 மணி நேரத்திற்கு முன்பாகவும் அறிவிப்புகள் வெளியிடப்பட வேண்டும்.
  • குற்றவியல் வழக்குகள் உள்ள வேட்பாளர்களைப் பரிந்துரைக்கும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகள் பொது வெளிப்பாட்டுக்காக அவர்களின் இணைய தளங்களிலும் தொலைக்காட்சி ஊடகங்கள் மற்றும் செய்தித்தாள்களிலும் இந்த அறிவிப்பை வெளியிட வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்