மாநிலத்தில் மொத்தமுள்ள 6,18,90,348 வாக்காளர்களின் மொத்த வாக்குப்பதிவு 69.72% ஆகும்.
39 தொகுதிகளிலும் தருமபுரியில் அதிகபட்சமாக 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
மத்திய சென்னையில் குறைவாக 53.91 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
பெண் வாக்காளர்களின் வாக்குப் பதிவானது 69.85% ஆகவும், ஆண் வாக்காளர்களின் வாக்குப் பதிவு 69.58% ஆகவும் பதிவாகியுள்ளது.
தமிழகத்தின் 39 தொகுதிகளிலும், புதுச்சேரியின் ஒரு தொகுதியிலும் தி.மு.க. கட்சியும் அதன் கூட்டணிக் கட்சிகளும் அமோக வெற்றியினைப் பெற்றன.
திருவள்ளூரில் காங்கிரஸ் வேட்பாளரும், முன்னாள் ஆட்சிப் பணி அதிகாரியுமான சசிகாந்த் செந்தில் அதிகபட்சமாக 5,72,155 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர் 4379 என்ற மிகவும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.