TNPSC Thervupettagam

மக்களவையின் நெறிமுறைக் குழு

November 2 , 2023 262 days 277 0
  • முன்னதாக 2021 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதியன்று கூடிய மக்களவை நெறிமுறைக் குழுவானது, மஹுவா மொய்த்ராவுக்கு எதிரான நிஷிகாந்த் துபேயின் புகாரை விசாரிக்க உள்ளது.
  • நெறிமுறைக் குழுவின் உறுப்பினர்கள் மக்களவை சபாநாயகரால் ஓராண்டு பதவிக் காலத்திற்கு நியமிக்கப்படுகிறார்கள்.
  • 1996 ஆம் ஆண்டில் டெல்லியில் நடைபெற்ற அவைத் தலைவர்கள் மாநாட்டில் இரு அவைகளுக்குமான நெறிமுறைக் குழுக்கள் பற்றிய கருத்தாக்கத்தினை முதலில் முன்வைத்தது.
  • பின்னர் குடியரசுத் துணைத் தலைவர் (மாநிலங்களவைத் தலைவர்) K.R. நாராயணன் அவர்கள் 1997 ஆம் ஆண்டு மார்ச் 04 ஆம் தேதியன்று மேலவையின் நெறிமுறைக் குழுவை அமைத்தார்.
  • மறைந்த சபாநாயகர் G.M.C. பாலயோகி, 2000 ஆம் ஆண்டில் மக்களவையின் தற்காலிக நெறிமுறைக் குழுவை அமைத்தார்.
  • இது 2015 ஆம் ஆண்டில் தான் சபையின் நிரந்தர அங்கமாக மாறியது.
  • நெறிமுறைக் குழு மற்றும் சிறப்புரிமைக் குழுவின் பணி பெரும்பாலும் ஒன்றுடன் ஒன்று ஒருங்கிணைந்திருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்