TNPSC Thervupettagam

மக்களவை உறுப்பினர் தகுதி நீக்கம்

October 9 , 2023 287 days 216 0
  • தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த லட்சத்தீவு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் முகமது பைசல் மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப் பட்டு உள்ளார்.
  • அவர் மீதும் மற்றும் மேலும் மூவர் மீதும் கொலை முயற்சி குற்றம் சாட்டப்பட்டு, மூவருக்கும் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
  • கொலை முயற்சி வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற அவரது மனுவைத் தற்போது கேரள உயர் நீதிமன்றம் நிராகரித்து உள்ளது.
  • 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 8(3)வது பிரிவின் கீழ், ஒரு குற்றத்திற்காக குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட ஒரு சட்டமியற்றும் அவை உறுப்பினர், அந்தக் குற்றம் தண்டிக்கப்பட்ட நாளிலிருந்து அப்பதவியினை வகிப்பதற்குத் தகுதியற்றவர் ஆவார்.
  • மேலும், அந்தத் தண்டனை உத்தரவை நிறுத்தி வைக்க முடியாவிட்டால், மேலும் ஆறு ஆண்டுகள் அப்பதவியினை வகிக்க தடை விதிக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்