TNPSC Thervupettagam

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்

June 29 , 2024 151 days 310 0
  • மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, ராகுல் காந்தியை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்துள்ளார்.
  • 1977 ஆம் ஆண்டு பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்களின் சம்பளம் மற்றும் படிகள் சட்டத்தின் 2வது பிரிவின் கீழ் அவர் எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரிக்கப் பட்டு உள்ளார்.
  • எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற, ஒரு கட்சியிலிருந்து குறைந்தபட்சம் 10% அளவு பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களவை இருக்க வேண்டும்.
  • எதிர்க்கட்சித் தலைவரின் மிகவும் முக்கியமான ஒரு கடமையானது அவையில் எதிர்க் கட்சியின் கருத்துக்களை முன்வைப்பதாகும்.
  • மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் நிழல் அமைச்சரவை கொண்ட நிழல் பிரதமராகக் கருதப்படுகிறார்.
  • ஆட்சியில் உள்ள அரசானது ராஜினாமா செய்தாலோ அல்லது மக்கள் அவையில் அதன் பெரும்பான்மை வீழ்த்தப் பட்டாலோ அரசு நிர்வாகத்தைக் கைப்பற்ற அந்த நிழல் அமைச்சரவை தயாராக இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்