TNPSC Thervupettagam

மக்களுக்கான G20 இணையப் புத்தகம்

September 23 , 2023 303 days 297 0
  • தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகமானது G20 அமைப்பிற்கான இந்தியாவின் தலைமைத்துவத்தினை சிறப்பித்துக் காட்டும் வகையிலான " மக்களுக்கான G20 இணையப் புத்தகம்" என்ற மின்னணுப் புத்தகத்தினை வெளியிட்டு உள்ளது.
  • மூன்று முக்கியப் பகுதிகளைக் கொண்ட இந்தப் புத்தகமானது G20 அமைப்பிற்கான இந்தியாவின் தலைமைத்துவத்தினைப் பற்றிய விரிவான ஒரு கண்ணோட்டத்தை வழங்குகிறது.
  • முதல் பகுதியானது 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற G20 அமைப்பின் உச்சி மாநாட்டினை உள்ளடக்கியதோடு மேலும் G20 அமைப்பின் கட்டமைப்பு மற்றும் இந்தியாவின் தலைமைத்துவத்தின் போது மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்புகளையும் விளக்குகிறது.
  • இரண்டாம் பகுதியானது, ஈடுப்பாட்டுக் குழுக் கூட்டங்களோடுச் சேர்த்து, அரசுப் பிரதிநிதி மற்றும் நிதி சார் செயல்முறைகளுக்கான பல்வேறு பணிக் குழுக்கள் நடத்திய கூட்டங்கள் பற்றிய விவரச் சுருக்கத்தினை வழங்குகிறது.
  • மூன்றாவது பகுதியில் G20 அமைப்பிற்கான இந்தியாவின் தலைமைத்துவத்தினை மக்கள் இயக்கமாக மாற்றிய ஜன்-பாகிதாரி (பொது பங்கேற்பு) நிகழ்வுகளைக் எடுத்துரைக்கும் வகையிலான புகைப்பட விளக்கக் கட்டுரை இடம் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்