மக்களைத் தேடி மருத்துவம் (MTM) எனும் மக்களின் வீடு தேடி மருத்துவ சேவையினை வழங்கும் திட்டம் ஆனது, கிராமப்புறங்களில் உள்ள பெண்கள் மற்றும் பட்டியலிடப் பட்ட சாதியினர்/பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் போன்ற மிகவும் பாதிக்கப்படக் கூடிய பிரிவினரைச் சென்றடைந்துள்ளது.
நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகிய தொற்றா நோய்களுக்கு (NCD) இந்தத் திட்டத்தின் கீழ் மிகவும் அதிகளவில் சிகிச்சையளிக்கப் பட்டாலும், புற்றுநோய் பரிசோதனைப் பரவல் மிகவும் குறைவாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்தக் கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில், 4,155 (60%) பேர் கிராமப் புறங்களையும், 2,701 (40%) பேர் நகர்ப்புறங்களையும் சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்தக் கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் சுமார் 78.84% பேர் MTM திட்டம் பற்றி அறிந்திருந்தனர் என்பதோடு இதில் 73% பேர் மகளிர் சுகாதாரத் தன்னார்வச் சேவை வழங்குநரின் (WHV) சேவையினைப் பெற்றுள்ளனர்.
உயர் இரத்த அழுத்தத்திற்கான பரிசோதனையில், இந்தக் கணக்கெடுப்பில் பங்கேற்ற 81.25% பேர் உயர் இரத்த அழுத்தத்திற்கான பரிசோனைக்கு உட்படுத்தப்பட்டனர் என்ற நிலையில் அவர்களில் சுமார் 93.8% பேர் கடந்த ஆண்டில் பரிசோனைக்கு உட்படுத்தப் பட்டனர்.
கடந்த ஆண்டில் பரிசோனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 73.6% பேர் MTM திட்டத்தின் கீழ் பரிசோதனை வசதியினைப் பெற்றனர்.
ஆண்களுடன் (79%) ஒப்பிடும் போது, பெண்களின் மத்தியில் அதிக விகிதத்தில் (82.6%) பரிசோதனை செய்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது என்பதோடு கடந்த ஆண்டில் MTM திட்டத்தின் கீழ் பெண்கள் அதிக எண்ணிக்கையில் (சுமார் 75.1% மற்றும் 71.2%) பரிசோதனை செய்துள்ளனர்.
MTM திட்டத்தின் கீழான உயர் இரத்த அழுத்தத்திற்கான பரிசோதனை ஆனது நகர்ப் புறங்களில் 61.5% ஆகவும், கிராமப்புறங்களில் 82.9% ஆகவும் இருந்தது.
இந்தக் கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் சுமார் நான்கு சதவீதம் பேர் மட்டுமே வாய்ப் புற்றுநோய்க்கான பரிசோனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
வெறும் 11.06% பெண்கள் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கும், 14.24% பெண்கள் மார்பகப் புற்றுநோய்க்குமான பரிசோதனையினை செய்து கொண்டுள்ளனர்.