TNPSC Thervupettagam

மக்களைத் தேடி மருத்துவம் 2024

December 22 , 2024 22 days 112 0
  • தமிழ்நாடு மாநில அரசின் மிகவும் முதன்மை சுகாதாரத் திட்டமான மக்களைத் தேடி மருத்துவம் (MTM) ஆனது, இரண்டு கோடி மக்களுக்குப் பயனளித்துள்ளது.
  • இந்தத் திட்டம் ஆனது, மாநிலம் முழுவதும் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்களுக்கு விரிவான வீடு தேடி சேவை வழங்கீடு அடிப்படையிலான சுகாதாரச் சேவைகளை வழங்குகிறது.
  • இது 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 05 ஆம் தேதியன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப் பட்டதோடு இது 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குப் பயனளிக்கிறது.
  • இதில் நோயாளிகளுக்கு உடலியக்க மருத்துவச் சிகிச்சையும் வழங்கப்படுகிறது.
  • இத்திட்டம் ஆனது மாநிலத்தில் 8,713 சுகாதார துணை மையங்களுடன் 385 கிராமப்புற தொகுதிகளுக்கும், 460 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுடன் சேர்த்து 21 மாநகராட்சிகளுக்கும் சேவையினை வழங்கி வருகிறது.
  • இத்திட்டத்திற்காக, தமிழக மாநிலத்தின் சுகாதாரத் துறைக்கு 2024 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் முகமைகளுக்கு இடையிலான பணிக்குழு விருதானது வழங்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்