TNPSC Thervupettagam

மக்காச்சோளம் சாகுபடிக்கான சிறப்பு திட்டம் – தமிழ்நாடு

June 26 , 2024 151 days 334 0
  • தமிழ்நாடு மாநில அரசானது, 18 மாவட்டங்களில் மக்காச்சோளச் சாகுபடியின் பரப்பினை அதிகரிப்பதற்காக 30 கோடி ரூபாய் செலவில் ஒரு சிறப்புத் திட்டத்தினை செயல்படுத்த உள்ளது.
  • 50,000 விவசாயிகளுக்கு உயர்தர மக்காச்சோள விதைகள், இயற்கை மற்றும் திரவ உரங்கள் மற்றும் யூரியா ஆகியவை அடங்கிய தொகுதி வழங்கப்படும்.
  • இது மக்காச்சோளச் சாகுபடி நிலப்பரப்பினை 50,000 ஹெக்டேர் பரப்பளவு வரை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2024-25 ஆம் ஆண்டில், 39.09 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தியுடன், சிறு தானியங்களின் சாகுபடி பரப்பளவை 9.95 லட்சம் ஹெக்டேராக அதிகரிப்பற்கு மாநில அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
  • இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த இலக்கானது 31.31 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்தது.
  • 2024-25 ஆம் ஆண்டில் மொத்த உணவு தானிய உற்பத்தி இலக்கு 129.63 லட்சம் மெட்ரிக் டன்களாக இருந்தது.
  • கடந்த ஆண்டு உணவு தானிய உற்பத்தியானது, 118.02 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்