பிலிப்பைன்ஸில் உள்ள லூசோன் தீவின் வடகிழக்கு முனையில் மங்க்குட் தைபூன் என்ற 5ம் வகை புயலானது 165 கி.மீ/மைல் வேகத்தில் வீசி பெரும் நிலச்சரிவை ஏற்படுத்தியுள்ளது.
மங்குட் என்பது மாங்கோஸ்டீன் எனும் பழத்தின் தாய்(Thai) மொழி வார்த்தையாகும். இந்த புயலானது பிலிப்பைன்ஸில் உள்நாட்டில் ஓம்போங் என்றழைக்கப்படுகிறது.
1976 ஆம் ஆண்டிலிருந்து தாக்கிய புயல்களில் இதுவே மிகவும் சக்தி வாய்ந்தது என ஹாங்காங் வானிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது.
பிலிப்பைன்ஸில் பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய புயல் 2013-ன் ‘சூப்பர்தைபூன் ஹையான்’ ஆகும்.
சூறாவளி மற்றும் தைபூன்கள் ஆகியவை ஒரே வகை புயல்களாகும். இரண்டுமே வெப்பமண்டலச் சூறாவளிகளாகும். ஆனால் பசிபிக் பெருங்கடலில் சர்வதேச தேதி கோட்டிற்கு மேற்குபகுதியில் உருவாகும் புயல்கள் தைபூன்கள் என்றழைக்கப்படுகின்றன.