TNPSC Thervupettagam

மசாலா பத்திரங்கள்

May 24 , 2019 1885 days 775 0
  • கேரள கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியம் (Kerala Infrastructure Investment Fund Board - KIIFB) அயல்நாட்டுச் சந்தையில் இருந்து நிதியினைப் பெறுவதற்காக மசாலாப் பத்திரங்களை வெளியிட்டுள்ளது.
  • மசாலாப் பத்திரங்களுக்காக சந்தைச் செயல்பாடுகளில் பங்கெடுத்துள்ள ஒரு முதலாவது இந்திய மாநிலமாக கேரளா உருவெடுத்துள்ளது.
  • மசாலாப் பத்திரம் என்பது ஒரு
    • ரூபாய் அடிப்படையிலான பத்திரம்
    • அமெரிக்க டாலரில் திருப்பிச் செலுத்தக் கூடியது
    • ஆங்கிலச் சட்டத்திற்கு உட்பட்டது.
  • ரூபாய் அடிப்படையிலான பத்திரங்கள் என்பது வெளிநாட்டுச் சந்தையில் இருந்து நிதியினை இந்திய ரூபாயில் பெறுவதினைக் குறிக்கின்றது.
  • கடந்த ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட உள்கட்டமைப்புகளை மறுசீரமைப்பதற்காக இந்தப் பத்திரங்களிலிருந்து வரும் நிதியினைப் பயன்படுத்த கேரளா முடிவு செய்துள்ளது.
  • KIIFB ஆனது 312 மில்லியன் டாலர் (ரூ.2150 கோடி) மதிப்பிலான நிதியினைப் பெறுவதற்காக 17-05-2019 ஆம் தேதியன்று இலண்டன் பங்குச் சந்தையில் மசாலாப் பத்திரங்களைப் பட்டியலிட்டுள்ளது.
  • இலண்டன் பங்குச் சந்தை உலகளவில் மசாலாப் பத்திரங்களின் ஒரு மிகப்பெரிய மையமாக விளங்குகின்றது. இது தனது சந்தையில் இதே போன்ற ரூபாய் அடிப்படையிலான 49 மசாலாப் பத்திரங்களைப் பட்டியலிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்