ஈக்யூடாஸ் சிறு நிதியியல் வங்கி, மஞ்சள் இராணுவ சேமிப்புக் கணக்கு ஒன்றைத் தொடங்கியுள்ளது. இந்தியன் பிரீமியர் லீக்கின் பகுதியான சென்னை சூப்பர் கிங்ஸ் உடன் இணைந்து செயல்படுவதன் மூலம் தன்னுடைய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக இந்தக் கணக்கைத் தொடங்கியுள்ளது.
இந்த மஞ்சள் இராணுவ சேமிப்புக் கணக்கு ரூ. 10 லட்சத்திற்குக் குறைவாக இருப்பு வைத்திருக்கும் கணக்குகளுக்கு ஆண்டிற்கு 6% வட்டியும், ரூ. 10 லட்சத்திற்கும் அதிகமாக இருப்பு வைத்திருக்கும் கணக்குகளுக்கு ஆண்டிற்கு5% வட்டியும் வழங்கும்.
ஈக்யூடாஸ்
ஈக்யூடாஸ் சிறுநிதி வங்கியென்று ஒரு நுண்நிதி கடனளிக்கும் வங்கியாக (Micro finance lender) 2007 ஆம் ஆண்டு ஈக்யூடாஸால் நிறுவப்பட்டது.
இதன் தலைமையகம் சென்னையிலுள்ளது.
ஈக்யூடாஸ் சிறுநிதி வங்கியானது சுதந்திரத்திற்குப் பிறகான தமிழ்நாட்டைச் சேர்ந்த முதல் தனியார் துறை வங்கியாகும்.
பிப்ரவரி 4, 2017 முதல் இவ்வங்கி பட்டியலிடப்பட்ட வங்கியாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் பட்டியலிடப்பட்ட வங்கி என்பது, RBI சட்டம் 1934ன் பட்டியல் - IIல் வகைப்படுத்தப்பட்ட வங்கிகளாகும்.