பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் கோதுமை பயிர்களில் மஞ்சள் சொறி நோய் இருப்பது கண்டறியப் பட்டுள்ளது.
மஞ்சள் சொறி நோய் அல்லது பட்டை சொறி நோய் என்பது கோதுமைப் பயிரின் இலைகளின் மீது மஞ்சள் கோடுகளினால் தாக்கப்படும் ஒரு பூஞ்சை நோயாகும்.
இது அவற்றின் ஒளிச்சேர்க்கையைப் பாதிக்கின்றது. இது தானியத்தின் அளவைக் குறைக்கின்றது.
மழை, பனி மற்றும் மூடுபனி ஆகியவை இந்த நோயின் வளர்ச்சியை ஆதரிக்கின்றன.
கடந்த ஆண்டு, இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தால் எச்டி - 3266 அல்லது பூசா யஷஸ்வி என்ற ஒரு புதிய வகைக் கோதுமையானது வெளியிடப்பட்டது.
இது மஞ்சள் / பட்டை, பழுப்பு / இலை மற்றும் கருப்பு / தண்டு போன்ற பெரிய சொறி நோய் சார்ந்த பூஞ்சைகளுக்கு எதிராக அதிக அளவு எதிர்ப்பு சக்தியைக் கொண்டிருந்தது.