TNPSC Thervupettagam

மஞ்சிரேவுலா வன இடைக் கற்கால பாறைக் கலை

October 19 , 2023 274 days 230 0
  • ஐதராபாத்தில் உள்ள மஞ்சிரேவுலா வன மலையேற்றப் பூங்காவில் உள்ள ஒரு பாறைக் குகையில் இடைக் கற்காலத்தை (மீசோலிதிக் காலம்) சேர்ந்த ஓவியங்கள் கண்டறியப் பட்டுள்ளன.
  • இடைக் கற்கால சகாப்தம் ஆனது கி.மு. 10,000 முதல் 4,000 வரையாகும்.
  • இதனால் இந்த ஓவியங்கள் 6,000 முதல் 12,000 ஆண்டுகள் பழமையானவை என்று அறிய முடிகிறது.
  • இந்த ஓவியங்களில் சிவப்பு நிறத்தில் வரையப்பட்ட மூன்று ஆமைகள், ஒரு மீன் மற்றும் ஒரு வடிவியல் உருவம் ஆகியவை காணப்படுகின்றன.
  • இந்த ஓவியங்கள் கண்டெடுக்கப்பட்ட பாறைக் குகையானது, இது இடைக் கற்கால மனிதர்களால் வசிப்பிடமாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்