மடகாஸ்கரின் ஜனாதிபதி, சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் உள்ளூர் பிரதிநிதியான கிறிஸ்டியன் சேவை புதிய பிரதமராக நியமித்துள்ளார்.
முன்னாள் பிரதமரான ஓலிவியர் மகாப்லே, இந்தியப் பெருங்கடலில் உள்ள தீவு நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வரவேண்டி ஒரு கருத்தொற்றுமை கொண்ட அரசை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிமன்ற உத்தரவிற்கிணங்க தமது பதவியை துறந்தார்.
2014ம் ஆண்டு மலகேசியனி அதிபராக ராஜாவோணரிமம்பியனினா (Rajaonarimampianina) பதவியேற்ற பிறகு நியமிக்கப்பட்ட நான்காவது பிரதமர் சே ஆவார்.
இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள இந்த தீவு நாடு நிக்கல், கோபால்ட், தங்கம். யுரேனியம் மற்றும் இதர தாதுப் பொருட்கள் ஆகியவற்றை கொண்டிருந்தாலும் உலகின் மிகுந்த ஏழை நாடுகளில் ஒன்றாக உள்ளது.