நீதிபதி அபிலாஷா குமாரி மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ளார்.
அம்மாநில ஆளுநர் நஜ்மா-ஹெப்துல்லா, இம்பாலிலுள்ள ஆளுநர் மாளிகையில் நீதிபதிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதன் மூலம் இவர் மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் மற்றும் மூன்றாவது முழு நேர தலைமை நீதிபதியாவார்.
இதற்கு முன்னர், இவர் குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றினார். இவர், ஹிமாச்சலப் பிரதேச முன்னாள் முதல்வர் திரு.வீரபத்திரசிங்கின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
மணிப்பூர் மாநில உயர்நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி அபய்மனோகர் சாப்ரே ஆவார். இம்மாநிலத்தில் உயர்நீதிமன்றம் ஏற்படுத்தப்படுவதற்கு முன் இது கௌஹாத்தி உயர்நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.