TNPSC Thervupettagam

மணிப்பூரில் சவுபாக்யா திட்டம்

November 30 , 2017 2580 days 900 0
  • மத்திய எரிசக்தி அமைச்சகம் பிரதமரின் சவுபாக்யா மின் திட்டத்தை மணிப்பூர் மாநிலத்தில் அறிமுகம் செய்துள்ளது.
  • சுமார் 1.75 இலட்சம் வீட்டுமனைகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறவுள்ளன. இதில் கிராமப்புறத்தில் 1.62 இலட்சம் வீடுகளும், நகர்ப்புறங்களில் 13 ஆயிரம் வீடுகளும் அடங்கும்.
  • இத்திட்டத்தின் கீழ் மணிப்பூர் மாநிலத்தின் மின்சாரக் கட்டமைப்புகளை (REC- Rural Electrification CorporationLimited) வலுப்படுத்தவும் மேம்படுத்தவும்  இந்திய அரசாங்கம் நிதியுதவி அளிக்கும்.
  • மத்திய எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஊரக மின்வசதியாக்க நிறுவனம் ஒரு மத்திய பொதுத்துறை நிறுவனம் ஆகும்.
  • இத்திட்டத்தின் முகைமை பணிகளை இந்நிறுவனம் மேற்கொள்ளும்.
  • ஏழ்மையான நிலையில் உள்ள மக்களுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும். இவ்வாறு இலவச மின் இணைப்பை பெறுவதற்கான பயனாளிகள் யார் யாரென்பது 2011-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சமூக பொருளாதார சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு முடிவு செய்யப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்