TNPSC Thervupettagam

மண்டல கலாச்சார மையங்கள்

July 26 , 2017 2679 days 1417 0
  • நாட்டின் பல்வேறு பாரம்பரிய கலை மற்றும் நாட்டுப்புற கலைகளை பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும் ஏழும ண்டல கலாச்சார மையங்கள் (ZCC) இந்திய அரசால் அமைக்கப்பட்டுள்ளது.
  • ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு மண்டலத லைமையகம் உள்ளது; அங்கு ஒரு மண்டல கலாச்சார மையம் நிறுவப்பட்டுள்ளது. பல மாநிலங்கள் பல கலாச்சார மையங்களிலும் உறுப்பினராக உள்ளது .
  • ZCC இன் ஏழு தலைமையகங்கள் - பட்டியாலா, நாக்பூர், உதய்ப்பூர், அலகாபாத், கொல்கத்தா, திமாபூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய இடங்களில் உள்ளது.
மண்டல மையங்கள் தலைமையகம் உள்ளடக்கிய மாநிலங்கள்
வடக்கு மத்திய மண்டல கலாச்சார மையம் அலகாபாத் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, பீகார், உத்திரப் பிரதேசம், உத்ராஞ்சல் மற்றும் டெல்லி
வடக்கு மண்டல கலாச்சார மையம் பட்டியாலா ஹிமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேசம்
மேற்கு மண்டல கலாச்சார மையம் உதய்பூர் கோவா, குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, டாமன் யூனியன் பிரதேசம், டையு மற்றும் தாத்ரா, நாகர் ஹவேலி
வட கிழக்கு மண்டல கலாச்சார மையம் திமாபூர் அசாம், திரிபுரா, மணிப்பூர், அருணாசலப் பிரதேசம், நாகாலாந்து மற்றும் மேகலாயா
கிழக்கு மண்டல கலாச்சார மையம் கொல்கத்தா பீகார், மேற்கு வங்காளம், ஓரிசா, அசாம், திரிபுரா, மணிப்பூர், சிக்கிம் மற்றும் அந்தமான் நிகோபார் யூனியன் பிரதேசம்
தென் மண்டல கலாச்சார மையம் தஞ்சாவூர் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், அந்தமான் நிக்கோபார், இலட்சத்தீவுகள், பாண்டிச்சேரி யூனியன் பிரதேசங்கள்
தெற்கு மண்டல கலாச்சார மையம் நாக்பூர் மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம்
 
  • பாரம்பரியமான கலை மற்றும் நாட்டுப்புற கலைகளை மேம்படுத்துவதற்கு மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேசங்கள் நிதிகளை ஒதுக்குவது இல்லை.
  • நாடு முழுவதும் பல்வேறு கலாச்சார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இந்த 7 ZCCகளுக்கு வருடாந்திர மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்