TNPSC Thervupettagam

மண்ணில் இருந்து ஆற்றலைப் பெற்று இயங்கும் எரிபொருள் கலம்

January 26 , 2024 304 days 313 0
  • மண்ணில் வாழும் நுண்ணுயிரிகளில் இருந்து பெரும் ஆற்றலைப் பெறக்கூடிய புதிய எரிபொருள் கலத்தை அமெரிக்காவின் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழக அறிவியல் நிபுணர்கள் உருவாக்கியுள்ளனர்.
  • ஒரு புத்தகத்தின் அளவு கொண்ட இந்த எரிபொருள் ஆனது, பசுமை உள்கட்டமைப்பு மற்றும் துல்லிய வேளாண்மை முறையில் பயன்படுத்தப்படும் நிலத்தடி உணர்விகளுக்கு எரிபொருள் வழங்குவதற்கு பயன்படுத்தக் கூடிய திறன் கொண்டது.
  • இது நச்சுத் தன்மை மிக்க மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இரசாயனங்களைப் பயன்படுத்தும் மின்கலங்களுக்குப் பதிலாக ஒரு நிலையான மற்றும் ஒரு புதுப்பிக்கத் தக்க மாற்றாக இது அமையக் கூடும்.
  • மண்ணில் வாழும் நுண்ணுயிரிகளில் இருந்து ஆற்றலைப் பெறக்கூடிய எரிபொருள் கலங்கள் (MFC) ஆனது, முதன்முதலில் 1911 ஆம் ஆண்டில் உருவாக்கப் பட்டதோடு அவை மின் கலத்தில் இருந்து வேறுபட்டு இயங்குவதில்லை.
  • இவையும்  நேர்மின் முனை, எதிர் மின்முனை மற்றும் மின்பகுளி ஆகியவற்றைக் கொண்டுள்ளன.
  • ஆனால் இரசாயனங்களைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்வதற்குப் பதிலாக, அருகிலுள்ள மின்கடத்திகளுக்கு இயற்கையாக எலக்ட்ரான்களை வழங்கும் பாக்டீரியாக்களிலிருந்து மின்சார ஆற்றலைப் பெறுகின்றன.
  • இந்த எலக்ட்ரான்களின் ஓட்டமானது, நேர்மின் முனையில் இருந்து எதிர் மின் முனையை நோக்கி நகர்ந்து மின்சுற்றை உருவாக்குகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்