மண் வள அட்டை தினம் - பிப்ரவரி 19
February 20 , 2020
1743 days
516
- பிரதமர் நரேந்திர மோடி மண் வள அட்டை திட்டத்தை 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 அன்று ராஜஸ்தானில் உள்ள சூரத்கரில் தொடங்கினார்.
- இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட ஐந்தாம் ஆண்டு நிறைவானது இந்த ஆண்டின் மண் வள அட்டை தினத்தில் அனுசரிக்கப்பட்டது.
- அனைத்து விவசாயிகளுக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மண் வள அட்டைகளை வழங்குவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்த அட்டையானது மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக் குறைபாடுகள் பற்றிய விவரங்களை வழங்கும்.
- இதன் மூலம் விவசாயிகள் பொருத்தமான உரங்களை மண்ணில் சேர்த்து விளைச்சலை அதிகரிக்க முடியும்.
- ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது 2015 ஆம் ஆண்டினை “சர்வதேச மண் ஆண்டு” என்று அறிவித்தது.
Post Views:
516