மதநல்லிணக்கத்தை பாதுகாப்பதற்காக அனைத்து மதம் சார்ந்த நூல்களை அவமதித்தலை ஆயுள் தண்டனைக்குரிய குற்றமாக மாற்றி இந்திய தண்டனை சட்டத்தை திருத்த பஞ்சாப் மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
2018ம் ஆண்டின் குற்றவியல் நடைமுறைச் சட்டம் (பஞ்சாப் திருத்தம்) மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் (பஞ்சாப் திருத்தம்) 2018 ஆகியவற்றிற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஸ்ரீ குருகிரந்த் சாஹிப், ஸ்ரீமத் பக்வத் கீதா, புனித குர்-ஆன் மற்றும் புனித பைபிள் ஆகியவற்றை அவமதிக்கும் அல்லது சேதம் விளைவிக்கும் அனைவருக்கும் ஆயுள் தண்டனை வழங்குவதற்கென இந்திய தண்டனைச் சட்டத்தில் 295AA என்ற பிரிவு புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.