சமீபத்தில் 2017ஆம் ஆண்டிற்கான தேசிய வணிக அடையாள அறிக்கை (Nation Brands 2017 Report) வெளியிடப்பட்டது. நூறு நாடுகளைக் கொண்ட மதிப்புமிக்க தேசிய நிறுவன அடையாள பட்டியலில் இந்தியா 8வது இடத்தைப் பெற்றுள்ளது.
2016 அறிக்கையை ஒப்பிடும் போது இந்தியா ஒரு இடம் சரிந்துள்ளது. இந்தியா வகித்த ஏழாம் இடத்தை இவ்வருடம் கனடா பெற்றுள்ளது.
பிராண்ட் பைனான்ஸ் எனும் அமைப்பால் (Brand Finance) வெளியிடப்படும் தேசிய வணிக அடையாள அறிக்கையின் ஒரு பகுதியான உலக மதிப்புமிக்க நாடுகள் பட்டியலானது 100 முன்னணி நாடுகளுடைய தேசிய நிறுவனத்தின் வலிமையையும் மதிப்பையும் கணக்கிடுகிறது.
ஒவ்வொரு நாட்டிலும் உள்ள அனைத்து வணிக அடையாள பொருட்களின் விற்பனையும் 5 வருட காலத்திற்கு கணிக்கப்படுகின்றன. அதனைத் தொடர்ந்து நாட்டின் மொத்த வருவாய்க்குச் சார்பாக மொத்த உள்நாட்டு உற்பத்தியினைக் (Gross Domestic Product - GDP) கணக்கில் கொண்டு மதிப்பிடப்படுகிறது.