ஆயுள் காப்பீட்டுக் கழக நிறுவனமானது சந்தை மூலதனத்தின் அடிப்படையிலான இந்தப் பட்டியலின் முதல் 10 நிறுவனங்களில் இடம் பெறவில்லை.
இதற்குப் பதிலாக இதில் பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் அதானி டிரான்ஸ்மிஷன் ஆகிய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.
இப்பட்டியலில் ஆயுள் காப்பீட்டுக் கழக நிறுவனமானது 11வது இடத்தினையும் பஜாஜ் ஃபைனான்ஸ் 10வது இடத்தினையும், அதானி டிரான்ஸ்மிஷன் 9வது இடத்தினையும் பெற்றுள்ளன.
மதிப்பு மிக்க இந்திய நிறுவனங்களின் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் 17.8 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சந்தை மூலதனத்துடன் முதலிடத்தில் உள்ளது.
அதைத் தொடர்ந்து டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், HDFC வங்கி, இன்ஃபோசிஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஐசிஐசிஐ வங்கி மற்றும் பாரத ஸ்டேட் வங்கி (SBI) ஆகியவை உள்ளன.