தமிழ்நாடு அரசானது, இந்த ஆண்டில் தமிழ்நாடு மாநில அரசுச் சந்தைப்படுத்துதல் கழகம் (டாஸ்மாக்) நடத்தும் 500 சில்லறை விற்பனைக் கடைகளை மூட உத்தரவிட்டு உள்ளது.
அடையாளம் காணப்பட்டு மூடப்பட உள்ள இந்த 500 கடைகள், டாஸ்மாக் நடத்தும் 5,329 சில்லறை விற்பனைக் கடைகளில் 10 சதவீதம் ஆகும்.
இவ்வளவு அதிக எண்ணிக்கையில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது இது மூன்றாவது முறையாகும்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள், 2016 ஆம் ஆண்டில் மீண்டும் ஆட்சிக்கு வந்த போது 500 கடைகளை மூடுவதாக அறிவித்தார்.
எடப்பாடி K.பழனிசாமி அவர்கள், 2017 ஆம் ஆண்டில் முதல்வராக பதவியேற்ற போது மேலும் 500 கடைகளை மூடுவதாக அறிவித்தார்.