TNPSC Thervupettagam

மது பான விதிமுறைகள்

August 30 , 2023 327 days 182 0
  • இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) ஆனது, 2023 ஆம் ஆண்டு 'உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (மதுபானங்கள்) முதல் திருத்த விதிமுறைகளை' வெளியிட்டுள்ளது.
  • இது 2024 ஆம் ஆண்டு மார்ச் 01 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.
  • இதன்படி, மதுபானத்தில் கிலோ கலோரி அலகில் உள்ள ஆற்றல் உள்ளடக்கத்தைத் தவிர விவரச் சீட்டில் ஊட்டச்சத்து குறித்த எந்தத் தகவல்களும் இருக்கக் கூடாது.
  • ஆற்றல் உள்ளடக்கம் தொடர்பான அத்தகைய அறிவிப்பும் தன்னார்வ அடிப்படையில் குறிக்கப் படலாம்.
  • 2018 ஆம் ஆண்டு உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (மதுபானங்கள்) விதிமுறைகளில், மதுபானப் புட்டிகளின் மீதான விவரச் சீட்டானது ஊட்டச்சத்து குறித்த எந்தத் தகவல்களையும் கொண்டிருக்கக் கூடாது என்று கூறப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்