TNPSC Thervupettagam

மத்திகா மொழி

February 3 , 2024 166 days 184 0
  • மத்திகா என்பது பல நூற்றாண்டுகளுக்கு முன் கர்நாடகாவில் இருந்து புலம் பெயர்ந்த சாகலியா சமூகத்தினரால் பேசப்படும் மொழியாகும்.
  • தற்போது இளைய தலைமுறையினர் மலையாள மொழியினைத் தேர்வு செய்வதால் இந்த மொழி மிகவும் வேகமாக அழிந்து வருகிறது.
  • கடைசியாக மத்திகா மொழியை மிக சரளமாகப் பேசுபவர்கள் இரண்டு பேர் மட்டுமே எஞ்சியுள்ளனர்.
  • மத்திகா என்பது எழுத்து வடிவம் இல்லாத மற்றும் தெலுங்கு, துளு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளின் கலவையாகும்.
  • இது கன்னடத்தைப் போலவே உச்சரிப்பு ஒலியைக் கொண்டிருந்தாலும், அதன் பல தரப்பட்ட மொழித் தாக்கங்களால் கேட்போரைத் திகைக்க வைக்கும்.
  • கன்னடத்தின் பழைய வடிவமான ஹவ்யாகா கன்னட மொழியானது, மத்திகா மொழி மீது பெருமளவிலான தாக்கத்தினை ஏற்படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்