மத்தியக் கலால் மற்றும் உப்புச் சட்டம், 1944 இயற்றப் பட்டதைக் குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் இந்தத் தினமானது கொண்டாடப் படுகின்றது.
மத்தியக் கலால் மற்றும் சுங்க வாரியமானது (Central Board of Excise and Customs - CBEC) நாடு முழுவதும் மத்தியக் கலால் தினத்தைக் கொண்டாடியது.
மத்தியக் கலால் மற்றும் சுங்க வாரியம் என்பது மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள வருவாய்த் துறையின் ஒரு பகுதியாகும்.
இந்த வாரியமானது சுங்கச் சட்டம், 1962, சுங்க கட்டணச் சட்டம், 1975, மத்திய கலால் சட்டம், 1944 மற்றும் சேவை வரிச் சட்டம் ஆகியவற்றைக் கையாள்கின்றது.
இருப்பினும், 2017 ஆம் ஆண்டு ஜூலை 1 அன்று சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax - GST) உருவாக்கப்பட்ட பிறகு, இந்த வாரியத்தின் நடவடிக்கைகள் GST தொடர்பான சட்டங்களால் வழி நடத்தப் படுகின்றன.
இது பற்றி
முன்னதாக மத்திய கலால் மற்றும் சுங்க வாரியமானது மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம் என்று அழைக்கப்பட்டது.
சுங்கம் தொடர்பான சட்டங்களை நிர்வகிப்பதற்காக சுங்க மற்றும் மத்திய கலால் / மத்திய GST துறையானது 1855 ஆம் ஆண்டில் அப்போதைய இந்தியாவின் தலைமை ஆளுநரால் நிறுவப்பட்டது.