TNPSC Thervupettagam

மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்விற்கு எதிரான தீர்மானம்

April 14 , 2022 960 days 448 0
  • மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வுத் திட்டத்தை கைவிடக் கோரி இந்திய அரசை வலியுறுத்தும் ஒரு தீர்மானத்தை தமிழக அரசு நிறைவேற்றி உள்ளது.
  • பாரதிய ஜனதா கட்சியைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் இந்தத் தீர்மானத்தை ஒரு மனதாக ஆதரித்தன.
  • இத்தீர்மானத்தில், நாடு முழுவதும் பல்வேறு மாநிலக் கல்வி வாரியங்கள் இருப்பதால், தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி சபையினுடைய பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும் இந்த நுழைவுத் தேர்வு அனைத்து மாணவர்களுக்கும் சமமான வாய்ப்பை வழங்காது என்று தமிழக சட்டசபை கூறியது.
  • மத்தியப் பல்கலைக் கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வின் காரணமாக மாநிலத்தில் உள்ள பல்வேறு மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் கீழ் செயல்படும் இணைப்புக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறையும் என்று தமிழக அரசு தெரிவித்தது.
  • மேலும், சமூகத்தின் விளிம்புநிலை மாணவர்களின் நிலையை மத்திய பல்கலைக் கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு உயர்த்தாது என்று மாநில அரசு வாதிட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்