மத்தியப் பிரதேச மாநில அரசானது, விலங்கு இடமாற்றத் திட்டத்தின் கீழ் 14 புலிகளை இராஜஸ்தான், ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு இடமாற்றம் செய்ய உள்ளது.
இதில் நான்கு புலிகள் ராஜஸ்தானுக்கும், இரண்டு புலிகள் ஒடிசாவிற்கும், எட்டு புலிகள் சத்தீஸ்கருக்கும் இடமாற்றம் செய்யப்படும்.
மத்தியப் பிரதேசத்தின் பந்தவ்கர், பன்னா, கன்ஹா மற்றும் பென்ச் ஆகிய இடங்களில் உள்ள புலிகள் வளங்காப்பகங்களில் இருந்து இவை இடம் மாற்றப்பட உள்ளன.
முன்னதாக, மத்தியப் பிரதேசம் இரண்டு வங்காளப் புலிகளை (ஓர் ஆண் மற்றும் ஒரு பெண் புலிகள்) பந்தவ்கர் புலிகள் வளங்காப்பகத்திலிருந்து (BTR) குஜராத்திற்கு இடம் மாற்றியது.
நம் நாடு முழுவதும் உள்ள 3,800 பெரும் பூனை இனங்களில் 785க்கும் அதிகமானவை மத்தியப் பிரதேசத்தில் உள்ளன.