TNPSC Thervupettagam

மத்தியப் புலனாய்வு அமைப்பின் BHARATPOL இணைய தளம்

January 10 , 2025 3 hrs 0 min 23 0
  • மத்திய அரசானது, சட்ட விசாரணை நிறுவனங்களுக்கான சர்வதேச ஒத்துழைப்பைச் சீரமைப்பதற்காக ‘BHARATPOL’ இணைய தளத்தினைத் துவக்கியுள்ளது.
  • BHARATPOL என்பது சர்வதேச காவல் துறை ஒத்துழைப்பு மூலம் முக்கிய பன்னாட்டுக் குற்றங்களுக்கு எதிரான உதவி மற்றும் நிகழ்நேர நடவடிக்கைக்கான தகவல் பரப்பு மையமாகும்.
  • இது மத்தியப் புலனாய்வு அமைப்பு (CBI) மூலம் உருவாக்கப்பட்டது.
  • மத்திய மற்றும் மாநில முகமைகள் சர்வதேச காவல் துறையுடன் எளிதாக தொடர்பு கொள்ளவும், அவர்களின் விசாரணைகளை விரைவுபடுத்தவும் இது வழி வகுக்கும்.
  • இந்த இணைய தளமானது, CBI அமைப்பு மற்றும் சர்வதேச காவல் அமைப்பினை (NCB - புது டெல்லி) இந்தியாவில் உள்ள அனைத்துச் சட்ட அமலாக்க ஆணையங்களுடன் ஒருங்கிணைக்கிறது.
  • BHARATPOL ஆனது இணைப்பு, சர்வதேச காவல் துறையின் அறிக்கைகள், குறிப்புகள், தகவல் ஒளிபரப்பு மற்றும் மூலங்கள் என ஐந்து முக்கிய மாதிரிகளைக் கொண்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்