TNPSC Thervupettagam

மத்தியப் புலனாய்வு அமைப்பிற்கான இசைவு திரும்பப் பெறல்

March 8 , 2022 867 days 391 0
  • தனது மாநிலத்தில் வழக்குகளை விசாரிப்பதற்கு மத்தியப் புலனாய்வு அமைப்பிற்குக் கொடுக்கப்பட்ட ஒரு இசைவினை திரும்பப் பெறும் 9வது மாநிலமாக மேகாலயா மாறி உள்ளது.
  • அதாவது, ஒரு மாநில அரசின் ஒப்புதல் இன்றி, அம்மாநிலத்திலுள்ள மத்திய அரசு அதிகாரிகள் அல்லது தனிநபர்கள் மீது எந்தவொருப் புதிய வழக்குகளையும் மத்தியப் புலனாய்வு அமைப்பு பதிவு செய்ய இயலாது.
  • மேகாலயாவிற்கு முன்பாக மத்தியப் புலனாய்வு அமைப்பிற்கு வழங்கிய இசைவினைத் திரும்பப் பெற்ற இதர 8 மாநிலங்களாவன; பஞ்சாப், மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மிசோரம் மற்றும் கேரளா ஆகியனவாகும்.
  • 2015 ஆம் ஆண்டில் முதன்முதலாக இந்த இசைவினைத் திரும்பப் பெற்ற மாநிலம் மிசோரம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்