மத்தியப் பொதுச் சேவைகள் (ஓய்வூதியம்) விதிகள், 2021 திருத்தம்
January 6 , 2024 328 days 288 0
2021 ஆம் ஆண்டு மத்தியப் பொதுச் சேவைகள் (ஓய்வூதியம்) விதிகளின் விதிமுறைகள் திருத்தப்பட்டுள்ளதாக இந்தியப் பணியாளர், பொது மக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் அறிவித்துள்ளது.
விவாகரத்து வழக்குகள் நிலுவையில் இருந்தாலோ அல்லது தங்கள் கணவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டாலோ அரசுப் பெண் ஊழியர்கள் தங்கள் கணவருக்குப் பதிலாக தங்கள் குழந்தை அல்லது குழந்தைகளை குடும்ப ஓய்வூதியத்திற்கான வாரிசாக பரிந்துரைக்க வழி வகுக்கும்.
தற்போது வரை, குடும்ப ஓய்வூதியமானது முதலில் உயிருடன் இருக்கும் கணவருக்குச் செல்ல வேண்டும் என்ற விதிகள் வழங்கப்பட்டு, வாழ்க்கைத் துணையின் (கணவரின்) மரணத்திற்குப் பிறகு தான் குழந்தைகள் அதைப் பெறத் தகுதி பெறுகிறார்கள்.