பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
9 புதிய அமைச்சர்கள் உள்பட 13 பேர், அமைச்சர்களாகப் பதவியேற்றனர். 4 இணையமைச்சர்கள், கேபினட் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளனர். முக்கிய பொறுப்புகளை ஏற்றுள்ள அமைச்சர்களின் விவரம் பின் வருமாறு:
அமைச்சர் |
புதிய பொறுப்பு |
நிர்மலா சீதாராமன் |
பாதுகாப்புத் துறை |
பியூஷ் கோயல்
|
ரயில்வே துறை மற்றும் நிலக்கரித் துறை |
சுரேஷ் பிரபு
|
தொழில் மற்றும் வர்த்தகத் துறை |
தர்மேந்திர பிரதான் |
பெட்ரோலியத் துறை மற்றும்
திறன் மேம்பாட்டுத் துறை
|
நிதின் கட்கரி
|
மத்திய நீர்வளம் மற்றும் கங்கை நதி தூய்மையாக்கல் துறை |
ராஜ்யவர்த்தன் சிங்
ராத்தோர் |
விளையாட்டுத்துறை (தனிப்பொறுப்பு) |
இந்திரா காந்திக்குப் பிறகு, பாதுகாப்புத் துறைக்குப் பொறுப்பேற்கும் இரண்டாவது பெண் அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆவார். மேலும், பாதுகாப்புத் துறைக்குப் பொறுப்பேற்கும் முதலாவது முழு நேர பெண் அமைச்சரும் இவரே ஆவார்.
பிரதமர், உள்துறை அமைச்சர், வெளியுறவுத் துறை அமைச்சர், நிதியமைச்சர் ஆகியோரைக் கொண்ட பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவில் இனி நிர்மலா சீதாராமனும் இடம்பெறுவார்.