TNPSC Thervupettagam

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை – 2023/24 சிறப்பம்சங்கள்

February 3 , 2023 815 days 487 0
  • மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் 2023-24 ஆம் ஆண்டிற்கான மத்திய நிதிநிலை அறிக்கையினைத் தாக்கல் செய்துள்ளார்.
  • வருமான வரி செலுத்துவதற்கான தள்ளுபடி வரம்பானது ஆண்டிற்கு ரூ.7 லட்சமாக உயர்த்தப் பட்டுள்ளது.
  • புதிய தனிநபர் வருமான வரிக் கட்டமைப்பின் கீழான வருமானப் படிநிலைகளானது, ஆறில் இருந்து ஐந்தாக மாற்றப் பட்டுள்ளது.
  • வரி விலக்கு வரம்பு ஆனது ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • இந்த நிதிநிலை அறிக்கையானது, இரயில்வே நிர்வாகத்திற்கான மூலதன முதலீட்டினை இதுவரை இல்லாத அளவில் ரூ. 2.40 லட்சம் கோடியாக உயர்த்தியுள்ளது.
  • நிதிப் பற்றாக்குறையானது 2023-24 ஆம் நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.9% ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • நிதிப் பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்காகப் பெறப்படும் நிகரக் கடன்களின் மதிப்பு ரூ.11.8 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • மூலதன முதலீட்டுச் செலவினமானது, தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக 33% அளவு  அதிகரிக்கப் பட்டு அது ரூ.10 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
  • இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3% ஆகும்.
  • கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளத்தை மையமாகக் கொண்டு, வேளாண் கடன்களுக்கான இலக்கு ரூ. 20 லட்சம் கோடியாக உயர்த்தப்படும்.
  • கிராமப்புறங்களில் உள்ள இளம் தொழில்முனைவோர்களின் வேளாண் சார்ந்த புத்தொழில்களை ஊக்குவிப்பதற்காக வேண்டி வேளாண் ஊக்குவிப்பு நிதி அமைக்கப் பட உள்ளது.
  • பிரதான் மந்திரி விஸ்வகர்மா கௌசல் சம்மான் இது பாரம்பரியக் கைவினைக் கலைஞர்களால் தயாரிக்கப்பட்டப் பொருட்களின் தரம், அளவு மற்றும் பரவலை மேம்படுத்துவதற்கான முதல்-வகையான ஒரு தொகுப்பு உதவித் தொகை சார்ந்த முன்னெடுப்பு ஆகும்.
  • ஆற்றல் மாற்றம் மற்றும் நிகரச் சுழிய உமிழ்வு இலக்குகள் மற்றும் ஆற்றல் பாதுகாப்பை அடைவதற்கான முன்னுரிமை சார்ந்த மூலதன முதலீடுகளுக்காக இந்த நிதிநிலை அறிக்கையில் ரூ. 35,000 கோடி வழங்கப்பட்டுள்ளது.
  • கர்நாடகாவில் உள்ள வறட்சியால் பாதிக்கப் படக்கூடியப் பகுதிகளில், நிலையான நுண்ணீர்ப் பாசன முறைகளின் பயன்பாட்டு ஊக்குவிப்புத் திட்டங்களுக்காக நிதி உதவி வழங்கப்பட உள்ளது.
  • பிரதான் மந்திரி PVTG மேம்பாட்டுத் திட்டமானது தொடங்கப்படுவதோடு, 740 ஏகலவ்யா மாதிரி உறைவிடப் பள்ளிகளில் அதிக அளவில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்