TNPSC Thervupettagam

மத்திய ஆப்பிரிக்க குடியரசிற்கு எதிரான தடைகளின் நீட்டிப்பு

February 5 , 2019 2122 days 613 0
  • ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையானது 2020 ஆம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி வரை ஆயுதத் தடை, பயணத் தடை மற்றும் சொத்துக்கள் பறிமுதல் உள்பட தனது தடைகளை மத்திய ஆப்பிரிக்க குடியரசின் (Central African Republic - CAR) மீது நீட்டிக்க முடிவெடுத்துள்ளது.
  • மேலும் இது மத்திய ஆப்பிக்க குடியரசு மீதான தடைகள் குழுவிற்கு உதவி செய்யும் நிபுணர்கள் குழுவின் பதவிக் காலத்தையும் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 29ம் தேதி வரை நீட்டித்து இருக்கின்றது.
மத்திய ஆப்பிரிக்க குடியரசிற்கு எதிரான தடைகள்
  • முஸ்லீம்கள் மற்றும் கிறித்துவர்கள் ஆகியோருக்கிடையேயான வன்முறை மூலம் 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பெரும்பான்மையான செலீகா முஸ்லீம் பழங்குடிகள் அந்நாட்டின் கிறித்துவ ஜனாதிபதியைத் துரத்தியடித்துவிட்டு ஆட்சியைக் கைப்பற்றிய காலம் முதலே அந்நாடு பாதிப்பிற்குள்ளாகி வருகின்றது.
  • பெரும்பாலும் கிறித்துவர்களாக உள்ள பலாகா எதிர்ப்புப் புரட்சியாளர்கள் கடுமையாக பதிலடி கொடுத்து அதனால் ஆயிரக்கணக்கானோரின் மரணங்கள் மற்றும் இடப்பெயர்ச்சி ஆகியவை ஏற்பட்டன.
  • இதன் விளைவாக நிறைய மக்கள் நாட்டின் வடக்குப் பகுதியை நோக்கியும் எல்லையைத் தாண்டியும் சாட் மற்றும் கேமரூன் நாடுகளில் நுழைந்தனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்