TNPSC Thervupettagam

மத்திய இந்திய காடுகளில் உள்ள அபாயம்

August 22 , 2024 93 days 158 0
  • மத்திய இந்தியாவின் கந்த்வா மற்றும் வடக்கு பெதுல் பிரிவுகளில் உள்ள காடுகள் காட்டுத் தீயால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளன.
  • கந்த்வாவில் வருடத்திற்கு மேலும் மூன்று தீ விபத்துகளும், வடக்கு பெதுல் பகுதியில் மேலும் ஒரு தீ விபத்தும் பதிவாகியுள்ளதால் அங்கு ஏற்படும் பல்வேறு தீ விபத்துகளின் எண்ணிக்கையில் சிறிது அதிகரிப்புப் பதிவாகியுள்ளதை அறிவியல் ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.
  • கந்த்வாவின் 45 சதவீதக் காடுகளும், வடக்கு பெதுலின் காடுகளில் 50 சதவீதமும் அதிக அல்லது மிக அதிக அளவில் தீ விபத்திற்கு உள்ளாக கூடிய அபாய மண்டலங்களுக்குள் உள்ளன.
  • கந்த்வாவில், இந்த அதிக அளவில் தீ விபத்திற்கு உள்ளாக கூடிய பகுதிகள் முக்கியமாக கல்வா, கிழக்கு கலிபித், மேற்கு கலிபித், சந்த்கர் மற்றும் ஆன்லியா மலைத்தொடர்கள் உள்ளிட்ட வடக்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளில் உள்ளன.
  • வடக்கு பெதுலில், இந்தப் பகுதிகள் வடமேற்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளான ஷாபூர், பெதுல், சர்னி மற்றும் பௌரா போன்ற பகுதிகளில் அமைந்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்