மத்திய உள்துறை அமைச்சகத்தின் 2017-2018ஆம் ஆண்டு அறிக்கையின்படி 2016ஆம் ஆண்டில் 54,723 குழந்தைகள் கடத்தப்பட்டிருக்கிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இது தொடர்பாக4 சதவீதம் மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
2015ஆம் ஆண்டில் 41,893 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2014ஆம் ஆண்டில் 37,854 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையில், நாட்டில் 2016ஆம் ஆண்டில் 8,132 ஆள்கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டில் குழந்தைக் கடத்தல் வழக்குகளில்7 சதவீதம் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டிற்கான விபரம் இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையின்படி 2016ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்காக 1,06,958 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டில் 94,172 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு6 சதவீதம் குற்றங்கள் அதிகரித்திருப்பது தெளிவாகிறது.