TNPSC Thervupettagam

மத்திய உள்துறை அமைச்சகம் - NGO

December 27 , 2017 2526 days 898 0
  • ஒரு அயல்நாட்டு வங்கி உட்பட மொத்தம் மத்திய அரசால் குறிப்பிடப்பட்டுள்ள 32 வங்கிகளில், அயல்நாடுகளிலிருந்து நிதியுதவிகளைப் பெறும் அனைத்து தனிநபர்களும், வர்த்தக நிறுவனங்களும் மற்றும் அரசுசாரா தொண்டு நிறுவனங்களும் ஒரு மாதத்திற்குள் ஓர் கணக்கை துவங்கிட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
  • அவற்றினால் இந்த 32 வங்கிகளில் துவக்கப்படும் கணக்குகள் மத்திய அரசின் பொது நிதியியல் மேலாண்மை அமைப்புடன் (Public Financial Management System – PFMS) ஒருங்கிணைக்கப்படும்.
  • வெளிநாடுகளிலிருந்து நிதியுதவியைப் பெறுபவர்களின் கணக்கு வழக்குகளில் உயர்மட்ட வெளிப்படைத் தன்மையையும், தடையற்ற அறிவிப்பு ஒத்திசைவையும் (Reporting Compliance) ஏற்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்கு முறைச் சட்டம் 2010-ன் [Foreign Contribution (Regulation) Act – FCRA 2010) கீழ் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் படி, உள்துறை அமைச்சகத்தால் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
  • வெளிநாடுகளிலிருந்து அளிக்கப்படும் நிதியுதவிகள் மற்றும் பிறசலுகைகளை  இந்தியாவின்    சில  தனிநபர்கள், சங்கங்கள், நிறுவனங்கள், கம்பெனிகள் போன்றவை பெறுவதில் ஒழுங்குமுறைகளை ஏற்படுத்துவதே  FCRA-ன் நோக்கமாகும்.
  • இது மத்திய நிதி அமைச்சகத்தின், கணக்குகளுக்கான பொதுக் கட்டுப்பாட்டாளரின் (Controller General of Accounts) கீழ் செயல்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்