TNPSC Thervupettagam

மத்திய திட்டக் கண்காணிப்புக் குழு – இ-விதான்

April 30 , 2018 2404 days 702 0
  • பாராளுமன்றத்தில் இ-விதான் என்பதற்கான மத்திய திட்டக் கண்காணிப்புக் குழு ஒன்றைமத்திய அரசுஆரம்பித்துள்ளது.
  • பாராளுமன்ற விவாகரத் துறை அமைச்சகத்தால் ஏப்ரல் 16 முதல் ஏப்ரல் 30 வரை அனுசரிக்கபடும் சுவச்சதா பக்வதா என்ற நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இ-விதான் என்ற திட்டத்திற்கான மத்திய திட்டக் கண்காணிப்புக் குழுவின் புதிய அலுவலகம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
  • இ-விதான் என்பது மாநில சட்டமன்றங்களை காகிதமற்ற பயன்பாடு கொண்ட, டிஜிட்டல் முறையில் இயங்கச் செய்யும் திட்டமாகும்.
  • அரசு இந்தத் திட்டம் மிகப் பெரும் அளவில் காகிதங்களின் பயன்பாட்டைக் குறைத்து சுத்தம் மற்றும் சுற்றுப்புறச் சுழல் ஆகியவற்றுக்கு மிகப் பெரிய அளவில் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கின்றது.
  • மத்திய பாராளுமன்ற விவகாரங்கள்துறை அமைச்சகம் இந்தத் திட்டத்திற்கு அனுமதியளித்திடும் நிறுவனம் ஆகும்.
  • இந்த திட்டத்தை நிறைவேற்றிட ஏற்படுத்தப்பட்ட ஒரு முக்கிய யுத்தியானது மத்திய மற்றும் மாநில நிலைகளில் திட்டக் கண்காணிப்புக் குழுக்களை ஏற்படுத்துவது என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்